

பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டுள்ள அவசர அரசியலமைப்புத் திருத்தங்கள் ஆபரேஷன் சிந்தூரில் அவர்களின் தோல்வியைக் காட்டுவதாக இந்திய பாதுகாப்புத் தளபதி கூறியுள்ளார்.
புணேவில் ஒரு நிகழ்ச்சியில் பாதுகாப்புத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான் பேசுகையில், "பாகிஸ்தானில் அவசரமாக மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட மாற்றங்கள், ஆபரேஷன் சிந்தூர் தோல்வியைக் காட்டும் உண்மையாகும்.
பாகிஸ்தான் அரசியலமைப்பின் 243 ஆவது பிரிவில் கொண்டுவரப்பட்ட திருத்தம், அந்த நாட்டின் உயர் பாதுகாப்பு அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இது, இந்தியாவில் குறிப்பாக ஆயுதப்படைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
அவர்கள் கூட்டுத் தலைமைப் பணியாளர் குழுவின் தலைவர் பதவியை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக - பாதுகாப்புப் படைகளில் தலைவர் பதவியை உருவாக்கியுள்ளனர். இது ஒரு பெரிய மாற்றம். மேலும், ராக்கெட் படை கட்டளையையும் உருவாக்கியுள்ளனர்.
நாங்கள், அனைத்துவிதமான சூழ்நிலைகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு தரப்படுத்தப்பட்ட அமைப்பை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.