

இணையவழி வணிக சேவை நிறுவனமான பிளிங்கிட், தன்னுடைய டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி, வெகு காலமாக விளம்பரப்படுத்தப்பட்டு வந்த 10 நிமிட சேவையை ரத்து செய்திருக்கிறது.
இதுவரை 10 ஆயிரம் வகையான பொருள்கள் வெறும் 10 நிமிடங்களில் என்று விளம்பரப்படுத்தி வந்த பிளிங்கிட், தற்போது 30 ஆயிரம் பொருள்கள் உங்கள் வீட்டு வாயிலில் என்று விளம்பரத்தை மாற்றியிருக்கிறது.
இ-வணிக சேவை வழங்கும் நிறுவனங்களுடன் மத்திய தொழிலாளர் நலத்துறை நடத்திய ஆலோசனையில், இதுபோன்ற திட்டங்களால், டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற கவலையை தெரிவித்திருந்தது.
டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்ற வலியுறுத்தலைத் தொடர்ந்து பிளிங்கிட் நிறுவனம் இந்த சேவையை ரத்து செய்ய முன் வந்துள்ளது.
இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து ஸ்விக்கி, ஸெப்டோ போன்றவையும் இந்த வரிசையில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 10 நிமிட டெலிவரி திட்டத்துக்கு எதிராக கடந்த புத்தாண்டு நாளன்று, டெலிவரி ஊழியர்கள் நடத்திய போராட்டம், இந்த பிரச்னையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.