

மத்திய முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான ரவி சங்கர் பிரசாத் வீட்டில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள அன்னை தெரசா கிரசென்ட் மார்க்கில் அமைந்துள்ள அரசு இல்லத்தில் பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி சங்கர் பிரசாத் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று காலை 8 மணியளவில் அவரது இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தில்லி தீயணைப்புப் படையினர் காலை 8.35 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
முதல்கட்டத் தகவலின்படி, வீட்டின் ஒரு அறையில் இருந்த மேஜையில் தீப்பிடித்து எரிந்ததாகவும், விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்வின்போது ரவி சங்கர் பிரசாத் வீட்டில் இருந்தரா? என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.