

வெளிநாட்டுப் பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் மாநில தொழில்துறை அமைச்சர் சஞ்சிவ் அரோரா ஆகியோரின் வெளிநாட்டு பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளார்.
முதல்வர் பகவந்த் மான் மற்றும் தொழில்துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா ஆகியோர் பிப்ரவரி மாதம் இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலுக்குப் பயணிக்கவிருந்தனர்.
பகவந்த் மானுக்கு மத்திய அரசால் அனுமதி மறுக்கப்படுவது இது முதல் முறையல்ல. இந்தப் பயணத்தில் சில மாநில அரசு அதிகாரிகளும் இடம்பெறவிருந்தனர். அனுமதி வழங்கப்பட்டிருந்தால், சரியான தேதிகள் இறுதி செய்யப்பட்டிருக்கும்.
இருப்பினும், இந்தப் பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது. அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை எனப் பஞ்சாப் ஆம் ஆத்மி பொதுச் செயலாளர், கட்சியின் ஊடகப் பொறுப்பாளர் பல்டேஜ் பன்னு கூறினார்.
வெளிநாடு பயணம் மேற்கொள்ள மூத்த தலைவர்களுக்கு வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து அரசியல் அனுமதி பெற வேண்டியது அவசியம்.
முதல்வர் என்ற முறையில் தூதரக கடவுச்சீட்டு வைத்திருக்கும் பகவந்த் மான், முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஒரு வாரக் காலப் பயணமாக இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணிக்கு ஆதரவாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பாரீஸ் நகரத்துக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், மத்திய அரசு அவருக்கு அரசியல் அனுமதி வழங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.