

மகாராஷ்டிரத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கும் தோ்தல் இன்று (ஜன. 15) நடைபெறுகிறது. மகாராஷ்டிரத்தில் 6 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் மாநகராட்சித் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி, பாலிவுட் திரையுலக கலைஞர்கள், சச்சின் டெண்டுகர் உள்பட முக்கிய விளையாட்டு வீரர்கள் உள்பட பல்வேறு பிரபலங்களும் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெறும் நிலையில், பகல் 1.30 மணி நிலவரப்படி தேர்தல் நடைபெறும் 29 மாநகராட்சிகளிலும் 29.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
முன்னதாக, மகாராஷ்டிரத்தில் கடந்த டிசம்பரில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற 286 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.