

பிரதமர் மோடி அசாம் பயணம்: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக சனிக்கிழமை (ஜன. 17) அசாம் மாநிலத்துக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்துக்கு அரசு முறைப் பயணமாகச் செல்லும் பிரதமர் மோடி, வரும் ஜன. 17 மற்றும் ஜன. 18 ஆகிய இருநாள்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குவாஹட்டியில் சனிக்கிழமை மாலை போடோ சமூகத்தைச் சேர்ந்த சுமார் 10,000 கலைஞர்கள் இணைந்து பகுரும்பா நடனமாடும் கலாசார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வரும் ஜன. 18 காலை நடைபெறும் ரூ. 6,950 கோடி மதிப்பிலான 86 கி.மீ. நீளமுடைய கசிரங்கா மேம்பாலத் திட்டப்பணிகளுக்கான பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்று துவங்கிவைக்கப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், வட இந்திய மாநிலங்களில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு இயக்கப்படும் 2 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அவர் கொடியசைத்துத் துவங்கிவைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.