பாஜக தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல்: தில்லி தலைமையகத்தில் நாளை சங்கமிக்கும் பாஜக தலைவர்கள்!

பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், அனைத்து மாநில பாஜக தலைவர்கள் தலைமையகத்தில் சங்கமம்...
Nitin Nabin
நிதின் நபின்X | Nitin Nabin
Updated on
1 min read

புது தில்லி: பாஜகவின் புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை(ஜன. 19) நடைபெற உள்ளது. கட்சித் தலைவா் பதவிக்கு ஜன.19-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். மாலை 5 மணி வரை மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். இதைத் தொடா்ந்து, மாலை 6 மணி வரை வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசமாகும்.

இதையொட்டி, அக்கட்சியின் முக்கிய தலைவர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், அனைத்து மாநில பாஜக தலைவர்கள் ஆகியோர் தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நாளை சங்கமிக்கின்றனர். பாஜக தேசிய செயல் தலைவராக பதவி ஏற்றுள்ள நிதின் நபீன் வேட்புமனு தாக்கலின்போது அவர்கள் அனைவரும் உடனிருப்பர் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை(ஜன. 20) அறிவிக்கப்படும்.

Summary

Top BJP leaders to converge on Monday for filing of nomination by Nabin for party president's post.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com