பாகிஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் கொல்லப்பட்டது தொடர்பாக..
சுட்டுக் கொலை
சுட்டுக் கொலை
Updated on
1 min read

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் குடும்ப தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஃபாரூக் என்ற ஃபாரூக்கே என அடையாளம் காணப்பட்டார். குடும்பத் தகராறு காரணமாக, வீட்டிலிருந்த உறவினர்களைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் அவர் கூறினார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் ஃபாரூக்கின் மனைவி, இரண்டு மாதக் குழந்தை, அவரின் இரண்டு சகோதரர்கள் அவர்களது மனைவிகள் உள்பட ஏழு பேர் அடங்குவர். குடும்ப தகராறு மற்றும் குடும்பப் பகையை துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கூறியதாக போலீஸார் குறிப்பிட்டனர்.

காவல்துறையினர் சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்து, இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Summary

A man opened fire inside his home, killing seven persons, including his wife and two-month-old daughter, over domestic dispute in Pakistan's northwestern Khyber Pakhtunkhwa province on Monday, police said.

சுட்டுக் கொலை
மாமல்லன் ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com