தாய்லாந்து எல்லையில் அடிமைகளாக சிக்கியுள்ள 16 இந்தியர்களை அரசு மீட்க வேண்டும்: ஒவைசி

தாய்லாந்து எல்லையில் அடிமைகளாக சிக்கியுள்ள இந்தியர்கள் 16 பேரை மீட்க வேண்டும் என்று மத்திய அரசிடம் ஒவைசி கோரிக்கை
Asaduddin Owaisi
அசாதுதீன் ஓவைசிகோப்புப் படம்
Updated on
1 min read

தாய்லாந்து எல்லையில் அடிமைகளாக சிக்கியுள்ள இந்தியர்கள் 16 பேரை மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்த எக்ஸ் பதிவில், ஒவைசி கூறியிருப்பதாவது "ஹைதராபாதை சேர்ந்த மூவர் உள்பட 16 இந்தியர்கள், தாய்லாந்தில் வேலை தருவதாக மோசடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தில் வேலை எனக்கூறி, மியான்மர் - தாய்லாந்து எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் நாள்தோறும் 18 முதல் 20 மணிநேரம் வேலைசெய்ய நிர்படுத்தப்படுவதுடன், உடல்ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனர். மேலும் பாஸ்போர்ட், தொலைபேசி, மருத்துவ வசதிகளை இழந்துள்ளனர்.

மியான்மர் - தாய்லாந்து எல்லையில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும் மீட்கப்படுவதை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிசெய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Asaduddin Owaisi
ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வாகனம் விபத்து! 10 வீரர்கள் பலி!
Summary

16 Indians enslaved’ at Myanmar–Thailand border: Owaisi urges External Minister Jaishankar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com