

காஷ்மீரின் பல பகுதிகளில் நிகழும் பனிப்பொழிவு காரணமாக, ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மூடப்பட்டுள்ளது.
சாலை மூடப்பட்டதால், 270 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. இதுகுறித்து போக்குவரத்துப் பிரிவு மூத்த அதிகாரி கூறுகையில், பனி அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதால் நெடுஞ்சாலை இன்னும் மூடப்பட்டுள்ளது.
குல்ஹாம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள நெடுஞ்சாலையில் புதிய பனிப்பொழிவு தொடர்ந்து நடைபெற்று வருவதால், போக்குவரத்தைச் சீரமைக்க இன்னும் சிறிது காலம் எடுக்கலாம். இவ்வாறு குறிப்பிட்டார். அதேசமயம் ஸ்ரீநகர் நகரிலும் இன்று அதிகாலை வேளையில் லேசான பனிப்பொழிவு காணப்பட்டது.
இருப்பினும், ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திற்கான விமானச் சேவைகள் இந்த மோசமான வானிலையால் பாதிக்கப்படவில்லை. ஏற்கெனவே மூன்று விமானங்கள் தரையிறங்கியுள்ள நிலையில், விமான நிலையச் செயல்பாடுகள் வழக்கம் போல் நடைபெற்று வருகின்றன என்று விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.