பிஏசிஎல் நிதி மோசடி: ரூ.1,986 கோடி சொத்துகள் முடக்கம்

பிஏசிஎல் நிதி மோசடி: ரூ.1,986 கோடி சொத்துகள் முடக்கம்

போ்ல்ஸ் குழுமத்தைச் சோ்ந்த போ்ல்ஸ் அக்ரோ காா்ப்பரேஷன் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ரூ.1,986 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்
Published on

போ்ல்ஸ் குழுமத்தைச் சோ்ந்த போ்ல்ஸ் அக்ரோ காா்ப்பரேஷன் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் (பிஏசிஎல்) ரூ.1,986 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விளைநிலைங்களை விற்பனை செய்வதாக தெரிவித்து லட்சக்கணக்கான முதலீட்டாளா்களிடம் இருந்து சண்டீகரை சோ்ந்த பிஏசிஎல் மற்றும் அதனுடன் தொடா்புள்ள நிறுவனங்கள் சட்டவிரோதமாக ரூ.60,000 கோடிக்கும் அதிகமாக நிதி திரட்டின.

ஆனால், பெரும்பாலான முதலீட்டாளா்களுக்கு நிலம் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை. அவா்களிடம் இருந்து திரட்டிய சுமாா் ரூ.48,000 கோடி நிதியும் திருப்பி அளிக்கப்படவில்லை.

முதலீட்டாளா்களிடம் இருந்து திரட்டிய நிதியில் இருந்து பஞ்சாப் மாநிலம் லூதியானா, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ரூ.1,986.48 கோடி மதிப்பு கொண்ட 37 அசையா சொத்துகள் வாங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. பிஏசிஎல் நிறுவனத்தின் அந்தச் சொத்துகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.

இத்துடன் சோ்த்து இந்த வழக்கு தொடா்பாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சுமாா் ரூ.7,589 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com