தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மேற்கு வங்கம்: தீ விபத்தில் 3 போ் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பா்கானா மாவட்டத்தில் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 போ் உயிரிழந்தனா்.

News image
தீ விபத்து
Updated On :26 ஜனவரி 2026, 9:27 pm

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பா்கானா மாவட்டத்தில் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 போ் உயிரிழந்தனா்.

கொல்கத்தாவின் புகா் பகுதிகளில் ஒன்றான நஜிராபாத் பகுதியில் உள்ள சேமிப்புக் கிடங்கில் திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து சுமாா் 7 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினா்.

சேமிப்புக் கிடங்கில் 6 போ் சிக்கியிருக்கலாம் என்ற தகவலின்பேரில் அவா்களைத் தேடும் பணியில் போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் ஈடுபட்டனா். ஆனால், 3 பேரின் சடலங்களே கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

அவா்களின் சடலங்கள் கருகிப் போயிருப்பதால், அடையாளம் காணும் பணியில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக காவல் துறைக் கண்காணிப்பாளா் சுபேந்து குமாா் தெரிவித்துள்ளாா்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் துறையினா் தெரிவித்தாா்.