மகாராஷ்டிர துணை முதல்வராக சுநேத்ரா பவார் பதவியேற்பு

மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக விமான விபத்தில் பலியான அஜீத் பவாரின் மனைவி சுநேத்ரா பவார் பதவியேற்றார்.
துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்ட சுநேத்ரா பவார்.
துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்ட சுநேத்ரா பவார்.
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநில முதல் பெண் துணை முதல்வராக விமான விபத்தில் பலியான அஜீத் பவாரின் மனைவி சுநேத்ரா பவார் பதவியேற்றார்.

மும்பையில் உள்ள லோக் பவனில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் சுநேத்ரா பவார் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநிலங்களவை எம்பியான சுநேத்ராவுக்கு துணை முதல்வர் பதவி வழங்க முதல்வர் ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராக சுநேத்ரா பவார் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். சுநேத்ரா வகித்து வரும் மாநிலங்களவை எம்.பி. பதவி அஜீத் பவாரின் மூத்த மகன் பார்த் பவாருக்கு வழங்க வாய்ப்புள்ளது.

மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜீத் பவார் ஜன.28ஆம் தேதி பாராமதியில் நேரிட்ட விமான விபத்தில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Sunetra Pawar, leader of the NCP legislative party and wife of late Deputy CM Ajit Pawar, takes oath as Deputy CM of Maharashtra at the Lok Bhavan.

துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்ட சுநேத்ரா பவார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வரப் போவதில்லை - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com