

மும்பையின் சியோன் நிலையம் அருகே புறநகர் ரயிலில் இருந்து விழுந்து மூன்று பயணிகள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் மத்திய ரயில்வே நெட்வொர்க்கில் உள்ள சியோன் நிலையம் அருகே புறநகர் ரயிலில் இருந்து 3 பயணிகள் வெள்ளிக்கிழமை காலை விழுந்துள்ளனர். சியோன் மற்றும் மதுங்கா ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ரயில் சியோன் நிலையத்திலிருந்து புறப்பட்டபோது பயணிகளிடையே தகராறு ஏற்பட்டது. மூன்று பயணிகள் தண்டவாளத்தின் அருகே விழுந்து காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், ரயில் பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. தாதர் ரயில்வே காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு குறிப்பிட்டார். இதனால் ரயில் நிலையத்தில் சிறிது பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.