பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

ராஜஸ்தானில் பயங்கரம்: லாரி மீது பேருந்து மோதியதில் 7 பேர் பலி; 15-க்கும் மேற்பட்டோர் காயம்

ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் உள்ள தில்லி-மும்பை விரைவுச்சாலையில் தனியார் சொகுசு பேருந்து விபத்தில் 7 பேர் பலியானது தொடர்பாக...

News image

ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில், புதன்கிழமை அதிகாலை தில்லி-மும்பை விரைவுச்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று லாரி மீது மோதி தீப்பிடித்து எரிந்ததில், ஏழு பேர் உயிரிழந்தனர் மற்றும் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். - பிடிஐ

Updated On :1 ஜூலை 2026, 10:05 am IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் உள்ள தில்லி-மும்பை விரைவுச்சாலையில், புதன்கிழமை அதிகாலை தனியார் பயணிகள் சொகுசு பேருந்து ஒன்று லாரியின் பின்புறத்தில் மோதி தீப்பிடித்ததில் 7 பேர் உடல்கருகி பலியாகினர்; 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் இருந்து மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூருக்கு சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டம், கொல்வா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தனவ்தா அருகே தில்லி-மும்பை விரைவுச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து புதன்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. அடுத்த சில வினாடியில் பேருந்து முழுவதும் தீ வேகமாகப் பரவியது.

ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் உள்ள தில்லி-மும்பை விரைவுச்சாலையில் தனியார் பயணிகள் சொகுசு பேருந்து ஒன்று லாரி மீது மோதி தீப்பிடித்து எரிந்ததில், ஏழு பேர் உயிரிழந்தனர், 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது பேருந்தின் கருகிய சிதைவுகளைக் ஆய்வு செய்யும் காவல்துறையினர்.

ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் உள்ள தில்லி-மும்பை விரைவுச்சாலையில் தனியார் பயணிகள் சொகுசு பேருந்து ஒன்று லாரி மீது மோதி தீப்பிடித்து எரிந்ததில், ஏழு பேர் உயிரிழந்தனர், 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது பேருந்தின் கருகிய சிதைவுகளைக் ஆய்வு செய்யும் காவல்துறையினர். - பிடிஐ

அதிகாலை நேரத்தில் பயணிகள் ஆழந்த உறக்கத்தில் இருந்த நிலையில், மேல் படுக்கையில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். இதனால் அவர்களால் உடனடியாக பேருந்தில் இருந்து வெளியேற முடியவில்லை.

இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 5 பேர் உடல் கருகி பேருந்திலேயே பலியாகினர். படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற இரண்டு பேர் வழியிலேயே பலியானதாக தௌசா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பியூஷ் தீட்சித் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.