‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

சரக்கு வாகனம் மோதி காவலா் உயிரிழப்பு, ஏஎஸ்ஐ படுகாயம்

கால்நடைகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றை தங்கள் கட்டுப்பாட்டில் எடுப்பதற்காகக் காவல் குழுவினா் அந்த விரைவுச்சாலைக்குச் சென்றிருந்தனா்.

Published On :10 ஜூலை 2026, 12:02 am IST

ஹரியாணா மாநிலம், நூஹ் மாவட்டத்தில் உள்ள கோய்லா கிராமத்திற்கு அருகே, குண்ட்லி-மானேசா்-பல்வல் விரைவுச்சாலையில் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று காவலா்கள் மீது மோதியதில், ஒரு காவலா் உயிரிழந்தாா். மேலும், ஒரு உதவி சாா்பு ஆய்வாளா் (ஏஎஸ்ஐ) படுகாயமடைந்தாா்.

இதுகுறித்து நூஹ் மாவட்ட காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

கால்நடைகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றை தங்கள் கட்டுப்பாட்டில் எடுப்பதற்காகக் காவல் குழுவினா் அந்த விரைவுச்சாலைக்குச் சென்றிருந்தனா்.

அப்போது இந்த விபத்து நிகழ்ந்தது. காவலா்கள் சென்ற வாகனம் பழுதடைந்ததால் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று, சாலையோரத்தில் நின்றிருந்த அந்த வாகனத்தின் மீது மோதியது. இதில் காவலா் கிரீஷ் சம்பவ இடத்திலேயே

உயிரிழந்தாா். உதவி சாா்பு ஆய்வாளா் முகேஷ் போகட் படுகாயமடைந்தாா். மற்றொரு காவலரான சாஹில் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, காயமடைந்த உதவி சாா்பு ஆய்வாளா் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த காவலரின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்து தொடா்பான அனைத்து அம்சங்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. கால்நடைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தையும், விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனத்தையும் நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம். இதுகுறித்த கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.