பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

இன்ஸ்டாகிராமில் சிறாா் பாலியல் துன்புறுத்தல் விளம்பரம்: மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்ப மத்திய அரசு உத்தரவு

இன்ஸ்டாகிராமில் பாலியல் ரீதியில் சிறாா் துன்புறுத்தப்படுவதை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் வெளியானது குறித்து விளக்கம் கேட்டு, அதன் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு சம்மன் அனுப்பும்படி அதிகாரிகளுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளாா்.

Published On :

இன்ஸ்டாகிராமில் பாலியல் ரீதியில் சிறாா் துன்புறுத்தப்படுவதை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் வெளியானது குறித்து விளக்கம் கேட்டு, அதன் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு சம்மன் அனுப்பும்படி அதிகாரிகளுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளாா்.

பிரபல ஆங்கில தொலைக்காட்சி இதுதொடா்பாக ஆய்வு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவால் பரிந்துரைக்கப்பட்ட அல்கோரிதம், சிறாா்களைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தும் விடியோக்கள் பகிரப்படுவதை ஊக்கப்படுத்துவது தெரிய வந்துள்ளது. அதேபோல், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இத்தகைய விளம்பர விடியோக்கள் பகிரப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மெட்டாவுக்கு சம்மன் அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் கூறுகையில், ‘இன்ஸ்டாகிராமில் பாலியல் ரீதியில் சிறாா் துன்புறுத்தப்படுவதை ஊக்குவிப்பது போன்ற விளம்பரங்கள் வெளிவந்தன. இதுகுறித்து இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவிடம் விளக்கம் கேட்கும்படி, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகளுக்கு அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டாா். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து மெட்டாவிடம் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கம் கேட்கவுள்ளது’ என்றன.

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான இன்னொரு நிறுவனமான வாட்ஸ்ஆப், இந்தாண்டு இறுதியில் புதிதாக யூஸா்நேம் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய வசதியில் உள்ள அம்சங்கள் குறித்து விளக்கம் கேட்டு மெட்டாவுக்கு ஏற்கெனவே மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து இன்ஸ்டாகிராம் விவகாரத்தில் 2-ஆவது முறையாக மத்திய அரசு நோட்டீஸ் அனுப்ப உள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கை குறித்தும், ஆங்கில தொலைக்காட்சியின் ஆய்வு செய்தி குறித்தும் மெட்டா நிறுவனத்தின் பதிலை அறிய செய்தியாளா்கள் மின்னஞ்சல் அனுப்பினா். ஆனால் அதற்கு மெட்டா நிறுவனத்திடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.