/

9ம் வகுப்பு மாணவிக்கு தொடர் கூட்டு பாலியல் வன்கொடுமை! சிறுமி உள்பட 5 சிறார்கள் மீது வழக்கு!

கேரளத்தில் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார்...

News image

போக்ஸோ வழக்கு... - கோப்புப் படம்

Updated On :4 ஜூலை 2026, 4:36 pm IST

கேரளத்தில், 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதில், 5 சிறார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்தனம்திட்டா மாவட்டத்தில், 9 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர், தனது வகுப்பைச் சேர்ந்த 4 மாணவர்கள் தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதே வகுப்பைச் சேர்ந்த மற்றொரு மாணவி அவர்களுக்கு உதவி செய்ததாகவும் பள்ளியில் நடைபெற்ற மனநல ஆலோசனை வகுப்பில் (கவுன்சிலிங்) ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் குற்றஞ்சாட்டப்பட்ட 4 சிறுவர்கள் மற்றும் 1 சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபற்றி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில், 4 மாணவர்களும் அந்தச் சிறுமியைப் பள்ளியின் அருகிலும் குற்றஞ்சாட்டப்பட்ட சிறுமியின் வீட்டிலும் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், அந்தச் சிறுவர்களுக்கு குற்றஞ்சாட்டப்பட்ட சிறுமி உதவி செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், பள்ளிக்கு வெளியே வேறு நபர்கள் சிலரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தச் சிறுமி கூறியுள்ளது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. மேலும், குற்றவாளிகளைத் தன்னால் அடையாளம் காண்பிக்க முடியும் எனவும் அவர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட வெளிநபர்களைப் பிடிக்க காவல் துறையினர் தனிக்குழுக்களை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

In Kerala, a case has been registered against five juveniles following allegations that a 9th-grade student was subjected to repeated sexual assault.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.