இந்தியா-கனடா தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் அடுத்த சுற்றுப் பேச்சுக்கு இந்திய அதிகாரிகள் திங்கள்கிழமை (ஜூலை 6) கனடா செல்ல உள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக புது தில்லியில் அவா் சனிக்கிழமை கூறியதாவது: இந்தியா-கனடா தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அடுத்த சுற்றுப் பேச்சுக்காக இந்திய அதிகாரிகள் திங்கள்கிழமை கனடா செல்ல உள்ளனா். அடுத்த 6 மாதங்களில் ஒப்பந்தப் பேச்சை நிறைவு செய்ய முயற்சிக்கப்பட்டு வருகிறது.
இந்தியா-பெரு இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் சில பிரச்னைகள் உள்ளன. பெரு நாட்டின் பல பொருள்களை இந்திய சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, அந்த ஒப்பந்தம் விரைவில் கைகூடும் என்று தோன்றவில்லை.
இந்தியா-ஐரோப்பிய யூனியன் வா்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருடன் வரும் ஜூலை 13-ஆம் தேதி நான் பெல்ஜியம் செல்ல உள்ளேன் என்று தெரிவித்தாா்.
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு ஏற்கெனவே நிறைவடைந்துள்ளது. தற்போது ஒப்பந்த ஆவணத்தை விரிவான முறையில் சட்ட ரீதியாக ஆய்வு செய்து இறுதி செய்யும் பணியில் இருதரப்பும் ஈடுபட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் நிகழாண்டு இறுதியில் கையொப்பமாகி, அடுத்த ஆண்டு அமலுக்கு வர வாய்ப்புள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்: பியூஷ் கோயல்

அடுத்த 6 மாதங்களில் 3 நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமைச்சா் பியூஷ் கோயல் தகவல்

இந்தியா - ஓமன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அமல்!






