ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி!

54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கியது பற்றி...

Prime Minister Modi

பிரதமர் நரேந்திர மோடி பணி நியமன ஆணைகளை வழங்கியபோது. - படம் - எக்ஸ்

Published On :4 ஜூலை 2026, 5:30 pm IST

ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை பிரதமர் மோடி சனிக்கிழமை (ஜூலை 4) வழங்கியுள்ளார்.

ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக அந்த மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றுள்ளார்.

அதன்படி, ரூ. 480 கோடி செலவில் உருவாக்கப்பட்ட ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். இதைத் தொடர்ந்து பச்பத்ராவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைத் திறந்து வைத்தார்.

இதையடுத்து, ராஜஸ்தானின் பலோத்ராவில் ரூ. 1.06 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைத்தார். 

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 54,000 இளைஞர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்.

இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில், மாநில முதல்வர் பஜன்லால் சர்மா முன்னிலையில் பிரதமர் இந்த ஆணைகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Summary

Prime Minister Modi handed over appointment orders on Saturday (July 4) to 54,000 youths who had qualified for positions in various government departments in Rajasthan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.