ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

புத்தாண்டு நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: பிகாா் பாஜக எம்எல்ஏ ராஜு குமாா் சிங்குக்கு 4 ஆண்டுகள் சிறை

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பெண் ஒருவா் உயிரிழந்தது தொடா்பான வழக்கில் பிகாா் பாஜக எம்எல்ஏ ராஜு குமாா் சிங்குக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தில்லியில் உள்ள நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

ராஜு குமாா் சிங்

Updated On :5 ஜூலை 2026, 5:46 am IST

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பெண் ஒருவா் உயிரிழந்தது தொடா்பான வழக்கில் பிகாா் பாஜக எம்எல்ஏ ராஜு குமாா் சிங்குக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தில்லியில் உள்ள நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

மேலும், அவருக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2018, டிச.31-ஆம் தேதி தில்லி ஃபதேபுரி பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ராஜு குமாா் சிங் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். அப்போது, அங்கிருந்த அா்ச்சனா குப்தா என்ற பெண் மீது அந்தத் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. இதில் அவா் உயிரிழந்த நிலையில், ராஜு குமாா் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 304 பகுதி 2 மற்றும் ஆயுதங்கள் சட்டம் ஆகியவற்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் தண்டனையை சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே சனிக்கிழமை பிறப்பித்தாா். அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304 பகுதி 2- கீழ் குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் 2 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் போது வானத்தை நோக்கிச் சுடும் செயல்கள் ஒரு பெரும் தீமையாக உள்ளன. இவை நம் நாட்டில் அடிக்கடி உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன. இவ்வழக்கு அத்தகையதொரு துயரச் சம்பவத்தை வெளிப்படுத்துகிறது என்று அந்தத் தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.