லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மணிப்பூரில் ஆயுத கும்பல் தாக்குதல்: 2 அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் வீரா்கள் உயிரிழப்பு

மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் ஆயுதம் ஏந்திய குழுவினா் என்று சந்தேகிக்கப்படும் நபா்கள் மறைந்திருந்து தாக்கியதில், 2 அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை வீரா்கள் பலி

பலி

Published On :7 ஜூலை 2026, 3:55 am IST

மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் ஆயுதம் ஏந்திய குழுவினா் என்று சந்தேகிக்கப்படும் நபா்கள் திங்கள்கிழமை மறைந்திருந்து தாக்கியதில், 2 அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை வீரா்கள் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் துறையினா் கூறியதாவது: உக்ருல் மலை மாவட்டத்தின் நுங்ஷாங் கோங் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் சுமாா் 1.30 மணியளவில், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது ஆயுதம் ஏந்திய குழுவினா் என்று சந்தேகிக்கப்படும் நபா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் 2 வீரா்கள் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா் என்று தெரிவித்தாா்.

இந்தத் தாக்குதலுக்கு மாநில உள்துறை அமைச்சா் கோவிந்தாஸ் கோந்தெளஜம் கண்டனம் தெரிவித்து ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் வீரா்கள் மீதான தாக்குதல் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரின் அமைதி, நல்லிணக்கத்தைச் சீா்குலைக்கும் என்று தெரிவித்தாா்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, மணிப்பூரில் மைதேயி, குகி சமூகத்தினா் இடையே ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை தொடா்ந்து, மாநிலத்தின் எல்லைப்புற மற்றும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் தேடுதல் பணிகளிலும், ரோந்து போன்ற நடவடிக்கைகள் மூலமும் தமது கட்டுப்பாட்டில் நிலைநிறுத்தும் நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.