தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!

சர்வதேச பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியா 125-வது இடம் பிடித்துள்ளது பற்றி...

News image

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்ஜே. - கோப்புப் படம்

Updated On :6 ஜூலை 2026, 5:52 pm IST

சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் 125-வது இடம் பிடித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி அரசின் மீது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை (ஜூலை 6) குற்றம் சாட்டியுள்ளார்.

சர்வதேச பாஸ்போர்ட் குறியீட்டு தரவரிசை நேற்று வெளியிடப்பட்ட நிலையில், இந்தியா 125-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மோடி அரசின் கொள்கைகளே இந்தியாவின் உலகளாவிய நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்குக் காரணம்.

"வெளிநாடுகளுக்குப் பயணம் செய்பவர்களும் அங்கு வசிப்பவர்களும் இந்திய பாஸ்போர்ட்டின் மரியாதையையும் வலிமையையும் அறிவார்கள்" என்று 2018 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி கூறினார். இப்போது அந்த வலிமை எங்கு போனது?

சர்வதேச பாஸ்போர்ட் தரவரிசையில், 2013 ஆம் ஆண்டில் 74 வது இடத்திலிருந்து 2026-ல் 80-வது இடத்திற்கு இந்தியா சரிந்துள்ளது. இந்த ஆண்டுக்கான மற்றொரு சர்வதேச பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியா மிகவும் மோசமான 125-வது இடத்தில் உள்ளது.

மோடி அரசானதுபாஸ்போர்ட்டின் விலையை அதிகரித்துள்ளது. பாஸ்போர்ட் கட்டணம் ரூ. 1,500-லிருந்து ரூ. 2,500 ஆகவும், தட்கல் கட்டணம் ரூ. 5,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குப் பயணம் செய்வதில் உள்ள எளிமையைக் கருத்தில் கொண்டாலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை கரோனா-19க்கு முந்தைய நிலையை விடக் குறைவாகவே உள்ளது என்று கார்கே குறிப்பிட்டுள்ளார்.

Summary

Congress leader Mallikarjun Kharge blamed Prime Minister Narendra Modi's government on Monday (July 6) for the Indian passport ranking 125th globally.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.