காங்கிரஸ் கட்சியை அழிக்கும் நோக்கில் முக்கிய பதவிகளில் தனது ஆதரவாளர்களை பிரதமர் நரேந்திர மோடி நியமித்து வருவதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்தார். இதனால், அம்மாநில மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது.
இந்த நிலையில், 2 ஆவது முறையாக கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தேர்வாகியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்தியப் பிரதேச வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது சட்டவிரோதமானது எனக் கூறியுள்ளார்.
இதுபற்றி, செய்தியாளர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) பிற்பகல் அவர் கூறியதாவது:
“மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது சட்டவிரோதம், அறநெறிக்கு எதிரானது மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்தச் சம்பவம் பிரதமர் மோடியின் உத்தரவு இல்லாமல் நடந்திருக்க முடியாது.
காங்கிரஸ் கட்சி மற்றும் ஜனநாயகத்தை அழிக்கும் நோக்கில் பிரதமர் மோடி இதைச் செய்கின்றார். முக்கிய பதவிகளில் குறிப்பாக, தேர்தல் நடத்தும் அதிகாரிகளாகத் தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களை நியமித்து அவர் சதி செய்கிறார்” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், தனது ஆதரவாளர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஏஜெண்டுகளை அனைத்து முக்கிய பதவிகளில் பிரதமர் நியமிப்பதாகவும், சட்டம், விதிகளைப் பின்பற்றாத நபர்களுக்கே அவர் அதிகாரம் கொடுப்பதாகவும் கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.
Summary
Kharge has stated that PM Modi is appointing his supporters to key positions with the aim of destroying the Congress.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம்: காங்கிரஸ்
மாநிலங்களவைத் தேர்தல்! ராகுல், டி.கே. சிவகுமார் முன்னிலையில் கார்கே வேட்புமனு தாக்கல்!

கர்நாடகத்தில் எத்தனை துணை முதல்வர்கள்? கார்கே பதில்!

வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டு சுற்றுப்பயணம் சென்றது ஏன்? பிரதமருக்கு கார்கே கேள்வி!
விடியோக்கள்

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



