வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தெலங்கானாவில் லஞ்ச ஒழிப்புத் துறையின் டிஎஸ்பியாக பணியாற்றிய சங்கிரெட்டி பீம் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத் துறையில் டிஎஸ்பியாக பணியாற்றிய அவரது இருப்பிடத்திலிருந்து ரூ.300 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தன்னுடைய பணிக்காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக இவரது பெயரில் இத்தனை சொத்துகள் இருக்கும் நிலையில், இன்னும் பினாமி பெயரில் இருக்கும் சொத்துகள் பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.
லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி மீது வந்த புகாரைத் தொடர்ந்து அவருக்குச் சொந்தமான 15 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில், தெலங்கானா மற்றும் கர்நாடகத்தில் ஏராளமான சொத்துகளை அவர் வாங்கிக் குவித்திருந்தது தெரிய வந்துள்ளது.
சொத்துகளின் பட்டியலில் ஹைதராபாத்தில் மிகப்பெரிய பங்களா, ஏராளமன வீடுகள், நிலங்கள், பொழுதுபோக்கு விடுதிகள், விவசாய நிலங்கள் போன்றவற்றை வாங்கிக் குவித்திருக்கிறார்.
ரூ.40 லட்சம் ரொக்கம், இரண்டு கிலோ தங்க நகைகள், 20 கிலோ வெள்ளி, வங்கிக் கணக்கில் ரூ.19.91 லட்சம் இருப்பு ஆகியவையும் பறிமுதல் ஆகியிருக்கிறது.
சுவாரஸ்யம் என்னவென்றால், தன்னுடைய மனைவியுடன் மே மாதம் சார் தாம் யாத்திரை செல்லும்முன்பு, தனக்கு ஏதேனும் ஆகிவிட்டால், என்னவாகும் எனக் கருதி, அவர் ஒரு டைரியில், தன்னுடைய சொத்துகளை கைப்பட எழுதி வைத்திருக்கிறார். கெடுபயனாக, அது தற்போது ஒரு ஆதாரமாக காவல்துறையிடம் சிக்கியிருக்கிறது.
Summary
assets 300 crore 40 lakh cash 2 kg gold! Anti-Corruption DSP arrested! A diary gave him away.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






