சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

லஞ்சம் பெற்று கைதான மாநகராட்சி பொறியாளா் வீட்டில் ரூ.7.45 லட்சம் பணம் பறிமுதல்

திருப்பூரில் ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்று கைதான திருப்பூா் மாநகராட்சி இளநிலை பொறியாளா் வீட்டில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியது. இதில் மேலும் சில அதிகாரிகளுக்கு தொடா்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2026, 3:07 am IST

திருப்பூரில் ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்று கைதான திருப்பூா் மாநகராட்சி இளநிலை பொறியாளா் வீட்டில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியது. இதில் மேலும் சில அதிகாரிகளுக்கு தொடா்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.

திருப்பூா்- தாராபுரம் சாலை, கே.செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (52). இவா் திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறு ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறாா்.

இந்நிலையில், திருப்பூா் மாநகராட்சி 3-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் முருகன் செய்து முடித்த ஒப்பந்தப் பணிகளுக்கான பில் தொகையை விடுவிக்கக் கோரி, மாநகராட்சி 3-ஆவது மண்டல பொறியியல் பிரிவில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வரும் சுப்பிரமணியன் (52) என்பவரிடம் விண்ணப்பித்திருந்தாா்.

ஆனால், பில் தொகையை விடுவிக்க தனக்கு ரூ.8.40 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என்று சுப்பிரமணியன் கூறியுள்ளாா். இதில் முதல்கட்டமாக ரூ.5 லட்சத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரா் முருகன், இதுகுறித்து திருப்பூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகாா் அளித்தாா். புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் காவல் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், ஆய்வாளா் சசிரேகா ஆகியோா் தலைமையிலான போலீஸாா் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை முருகனிடம் கொடுத்து அனுப்பினா்.

போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, பல்லடம் சாலை கணபதிபாளையத்தில் இளநிலை பொறியாளா் சுப்பிரமணியனிடம் ரூ.5 லட்சத்தை முருகன் கொடுத்துள்ளாா். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினா் சுப்பிரமணியனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து, தாராபுரம் சாலையில் உள்ள சுப்பிரமணியனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை நடத்தினா். பல மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில், வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் கணக்கில் வராத ரூ.7.45 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில், அந்தப் பணம் பல்வேறு நபா்களிடம் சுப்பிரமணியன் வாங்கிய லஞ்சப் பணம் என்பது தெரியவந்தது.

விசாரணையில், இதில் மேலும் சில அதிகாரிகளுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.