மும்பையில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், குடியிருப்புப் பகுதிக்குள் 7 அடி நீள முதலை ஒன்று நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக தகவல் அறிந்து வந்த வனவிலங்கு மீட்புப் படையினர் முதலையைப் பிடித்துச் சென்ற விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. மும்பை நகரத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளக் காடாக மாறி, குடியிருப்புப் பகுதிகளிலும் நீர் தேங்கியுள்ளது.
இதனிடையே மும்பை மொரார்ஜி நகர் பகுதியில் உள்ள குடியிருப்பிற்குள் 7 அடி நீள முதலை ஒன்று புகுந்தது. உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் உதவியுடன் அங்கு விரைந்த வனவிலங்கு மீட்புப் படையினர் முதலையை வலை மூலம் பிடித்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
மும்பை புறநகரில் உள்ள போவாய் ஏரி முழுமையாக நிரம்பியதால், வெள்ள நீர் திறந்துவிடப்பட்டபோது, அதில் முதலை அடித்துக்கொண்டு வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
வெள்ளத்தால் அடிப்படை வசதிகளின்றி மக்கள் தவித்துவரும் நிலையில், குடியிருப்புப் பகுதிக்குள் முதலை புகுந்ததால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Summary
7-foot-long crocodile enters residential area of mumbai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீடுகளுக்குள் எதிர்பாராத வகையில் புகுந்த வெள்ள நீர்!

மும்பையில் கனமழை! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

மும்பை கனமழை! கொரானாவுக்குப் பின் முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து! மிக அரிய நிகழ்வு

மும்பையில் கனமழை: முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு வாகனம் முன் விழுந்த மரம்!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK




