அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

விடையோடு அச்சிடப்பட்ட வினாத்தாள்! பரபரப்பின் உச்சியில் கேரள பல்கலை.

விடையோடு அச்சிடப்பட்ட வினாத்தாள் விவகாரத்தால் பரபரப்பின் உச்சியில் கேரள பல்கலை. பற்றி..

News image

தேர்வு - பிரதி படம் - file photo

Updated On :7 ஜூலை 2026, 1:17 pm IST

தேர்வுகள் என்றாலே குளறுபடிகள் என மாணவர்கள் மனவேதனையில் இருக்க, கேரள பல்கலைக்கழகம் மட்டும் விடையோடு, வினாத்தாளை அச்சிட்டு, மாணவர்களின் மனதில் மகிழ்ச்சியை ஊட்டியிருக்கிறது.

கேரள மாநிலத்தில் இயங்கும் கேரள பல்கலைக்கழகத்தில் நடந்த பிஎஸ்சி புள்ளியில் பாடத் தேர்வில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில், ஒரு வினாவுக்கான விடையும் அச்சிடப்பட்டிருந்தது குறித்து வெளியான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

பிஎஸ்சி புள்ளியியல் பாடப்பிரிவில் பயின்று வரும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத் தேர்வின்போது, ஒரு வினாவுக்குக் கீழே, அதற்கான விடையும் அச்சிடப்பட்டிருந்ததைப் பார்த்த மாணவர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைந்திருப்பர்.

இது பிரிண்டிங் பணியில் நடந்த தவறு என்று ஊழியர்கள் விளக்கம் அளிக்க தேர்வு கட்டுப்பாட்டாளரோ, பல்கலையிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

திங்களன்று நடைபெற்ற பி.எஸ்சி. (B.Sc.) இரண்டாம் பருவப் புள்ளி விவரவியல் தேர்வில், "ஒருவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சியின் அளவு" மற்றும் "அவரது உடல் எடை" ஆகிய மாறிகள் எவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு நேர் கீழே "எதிர்மறையாகத் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன" (Negatively correlated) என்ற சொற்கள் அச்சிடப்பட்டிருந்தன. இதுதான் அந்தக் கேள்விக்கான விடை.

விடைத்தாள்கள் அனைத்தும், வினா - விடை வங்கியிலிருந்து ஆசிரியர்களால் தயாரிக்கப்படும். அப்போது தவறுதலாக, விடை ஒன்று வினாவுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. அது அறியாமல், பிரிண்ட் செய்யப்பட்டுவிட்டது என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Summary

Question paper printed with answers! Kerala University in a state of high agitation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.