நீட் வினாத்தாள் கசிந்தது குறித்த தகவல்கள் சிபிஐ விசாரணையில் வெளிவந்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான ‘நீட்’ தோ்வு கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 23 லட்சம் போ் தோ்வெழுதினா்.
இந்நிலையில், நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மாநில காவல் துறையின் சிறப்பு படையினர் நடத்திய விசாரணையில் கேரளத்தில் எம்பிபிஎஸ் பயிலும் சிகாரை (ராஜஸ்தான்) சோ்ந்த மாணவரிடம் இருந்து மாதிரி வினாத்தாள் பரவியது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. தொடர்ந்து இந்த விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது.
இதனிடையே, மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் சுபம் கா்நாா், ஜெய்பூரில் மங்கிலால் பிலால், விகாஸ் பிலால், தினேஷ் பிலால், குருகிராமில் யாஷ் யாதவ் ஆகிய 5 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு, சந்தேகத்தின்பேரில் பலரை பிடித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதனால், மேலும் பலா் கைதாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
கசிந்தது எப்படி?
குருகிராமைச் சேர்ந்த யாஷ் யாதவ் என்பவர் மூலம் நீட் வினாத்தாள் ராஜஸ்தானில் கசிந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விகாஸ் பிலால் என்பவருக்கும் யாஷ் யாதவுக்கும் ஏற்கெனவே பழக்கம் இருந்திருக்கிறது. இந்த நிலையில், விகாஸ் பிவாலின் தந்தை தினேஷ் பிவால், யாஷ் யாதவிடம் இருந்து அசல் வினாத்தாளைப் பெற்று அதனை ஸ்கேன் செய்து பிடிஎஃப் கோப்புகளாக மாற்றியுள்ளார்.
பின்னர், வினாத்தாளை கைகளால் எழுதி, அதனை நகலெடுத்து ராஜஸ்தான் மாநிலம், சிகாரில் உள்ள பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு விநியோகித்ததாகக் கூறப்படுகிறது. இந்த வினாத்தாளைப் பெற மாணவர்கள் ரூ. 2 முதல் 5 லட்சம் வரை கொடுத்துள்ளனர்.
மாணவர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் சிபிஐ காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த விவகாரத்தில் இன்னும் பலர் கைதாக வாய்ப்புள்ளது.
Summary
How Did the NEET Question Paper Leak? Shocking Revelations Emerge During Investigation!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்! ராஜஸ்தான் பாஜக நிர்வாகி கைது!

ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள்! டெலிகிராமில் வாங்கிய இளைஞர்!

நீட் வினாத்தாள் கசிவு: அரசு கவனம் செலுத்தாதது ஏன்? - காங்கிரஸ்

நீட் வினாத்தாள் கசிவு: சிபிஐ வழக்குப் பதிவு!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு


