ரயிலின் முதல் வகுப்பு ஏசி அறையை முதலிரவு அறை போல அலங்கரித்து இணையத்தில் பகிரப்பட்ட விடியோ பல்வேறு சர்ச்சைகளைத் தூண்டியிருக்கிறது.
ரயில்களில் செல்வது என்பது பலருக்கும் அலாதியான பிரியம்தான். நீண்டதூரப் பயணங்களுக்கு பேருந்துகள், கார்களில் செவதைவிட அதிகளவில் சொகுசுப் பயணத்துக்கும், விமானக் கட்டணத்தைவிட குறைவான கட்டணம் என்பதாலும், கழிப்பறை வசதி, உணவுப் பொருள்கள் கிடைப்பதால் பலரும் ரயில் பயணத்தை மிகவும் விரும்புகின்றனர்.
அதேநேரத்தில், திடீரென டிக்கெட் பதிவு செய்யமுடியாமல் போவது, தத்கல் பதிவிலும் உள்ள சிக்கல்களால் பலரும் அதிருப்தியடைந்து வருகின்றனர்.
சாதாரண செகண்ட் சிட்டிங் முதல் ஏசி ரயில்கள் என்றாலும், புதியதாகத் தொடங்கப்பட்ட வந்தே பாரத், நமோ பாரத் ரயில்கள் என்றாலும் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் சரியான திட்டமிடலுடன் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை என்றால் அவ்வளவுதான்.
இவ்வாறு ரயிலில் செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்வது குதிரைக் கொம்பாக இருக்கும் சூழலில், ரயிலின் முதல் வகுப்பு ஏசி அறையை, ‘ஐ லவ் யூ’ என்ற வாசகத்துடன் பலூன்கள், பூக்கள், ரோஜா இதழ்கள், பூ தோரணங்களுடன் அலங்கரித்து முதலிரவு அறை போல இணையத்தில் பகிரப்பட்ட விடியோ ஒன்று மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “இதில் எந்த விதிமீறலும் இல்லை. அந்தப் பயணிகள் இருவரும் முதல்வகுப்பு ஏசி பெட்டியில் முன்பதிவு செய்துள்ளனர். அவர்கள் பொதுச் சொத்து எதையும் சேதப்படுத்தவில்லை. அலங்காரம் செய்யக்கூடாது என்று விதிகளும் இல்லை” என்று தெரிவித்தனர்.
A First AC coach has reportedly been decorated with a "honeymoon-style" setup.
— The Nalanda Index (@Nalanda_index) July 7, 2026
The Railway administration must explain: is it's allowed? @RailMinIndia @RailwaySeva @AshwiniVaishnaw @PMOIndia pic.twitter.com/ofE4AGawJH
இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில், முதலிரவு அறைபோல் அலங்கரித்த மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 'ரஹத் ரூம் டெக்கரேஷன்' நிறுவனத்தினர் கூறுகையில், “ஜால்னாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்காக அந்தப் பெட்டி முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர்கள் ஔரங்காபாத்திலிருந்து ஜால்னா ரயில் நிலையத்திற்கு காரில் பயணம் செய்தபோது, தங்கள் குழுவினர் ரயில் பெட்டியை முன்கூட்டியே அலங்கரித்துள்ளனர். அவர்கள் ஜால்னாவில் ஏறியுள்ளனர். பெட்டியை அலங்கரிக்க எந்த அனுமதியும் வாங்க வேண்டியதில்லை” என்றனர்.
இந்த விடியோ காட்சிகள் இணையத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கும் நிலையில், தங்களின் முதலிரவை மறக்க முடியாத பயணமாக இந்தப் பயணம் மாற்றியிருக்கிறது என்றும் சிலரும், ரயில் பெட்டிகளை பயணிகளுக்கு அலங்கரிக்க அனுமதியளித்தது யார் என்று ஒரு சிலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுபோன்ற நிகழ்வுகளில் பூக்கள், தோரணங்கள், பலூன்கள் ஆகியவை எளிதில் தீப்பற்றக்கூடியவற்றை எவ்வாறு அனுமதித்தனர் என்றும் கேள்வி எழுப்பினர். இப்படி கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் சிலர் பாஸிடிவ்வாக “முதலிரவு எஸ்பிரஸ் - Suhagraat Express” என்றும், ‘ரயிலில் தேனிலவு’ என்றும் வர்ணித்து சில பயனர்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளைத் தனிநபர்கள் அலங்கரிக்க அனுமதி உள்ளதா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவை டேக் செய்து சிலர் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
Summary
The cabin of a First AC train coach was transformed into a lavish romantic setup, with a video showing the cabin covered in flowers, balloons and rose petals.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









