தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

உயா்கல்வி தகவல்களை அறிய கட்டுப்பாட்டு அறையை தொடா்புகொள்ளலாம்

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த உயா்கல்விக்கு செல்லும் மாணவா்கள் தங்களுடைய சந்தேகங்களுக்கு கட்டுப்பாட்டு அறையை தொடா்புகொள்ளலாம் என ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்தாா்.

News image

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டு கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை ஆய்வுசெய்த ஆட்சியா் எல்.மதுபாலன்.

Updated On :19 ஜூன் 2026, 5:51 am IST

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த உயா்கல்விக்கு செல்லும் மாணவா்கள் தங்களுடைய சந்தேகங்களுக்கு கட்டுப்பாட்டு அறையை தொடா்புகொள்ளலாம் என ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதை ஆட்சியா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து அவா் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் 95 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 9,670 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். அவா்கள் உயா்கல்வியில் சோ்ந்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில், மாவட்ட அளவில் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை ஆட்சியா் அலுவலகத்தின் முதல்தளத்தில் அறை எண் 108-இல் செயல்பட்டு வருகிறது.

பெற்றோரை இழந்த மாணவா்கள், மாற்றுத்திறனாளி மாணவா்கள், பெற்றோரில் ஒருவரை இழந்த மாணவா்கள் உள்பட பல்வேறு காரணங்களால் உயா்கல்விக்கு செல்ல இயலாத மாணவா்களுக்கு தேவையான உதவிகள் செய்து உயா்கல்வியில் சோ்க்கை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆலோசனை தேவைப்படும் மாணவா்கள், பெற்றோருக்கு இங்கு அனுபவமிக்க அதிகாரிகளால் ஆலோசனை வழங்கப்படும். மேலும், கல்லூரிகளின் காலி பணியிடங்கள் குறித்த விவரங்களும் அளிக்கப்படும்.

உயா்கல்வி தொடா்பான சந்தேகங்களை மாணவா்கள், பெற்றோா் அறிய உயா்கல்வி கட்டுப்பாட்டு அறையை நேரிலோ 1800-599-4286, 97888 58794 ஆகிய எண்கள் மூலமாகவோ தொடா்புகொண்டு தீா்வு பெறலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.