தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

வீடுகளுக்குள் எதிர்பாராத வகையில் புகுந்த வெள்ள நீர்!

மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், வீடு ஒன்றில் எதிர்பாராத வகையில் வித்தியாசமாக வெள்ள நீர் புகுந்துள்ளது குறித்து...

News image

மின் இணைப்பு வழியாக வெளியேறும் நீர் - எக்ஸ்

Updated On :8 ஜூலை 2026, 9:52 pm IST

மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், வீடு ஒன்றில் எதிர்பாராத வகையில் வித்தியாசமாக வெள்ள நீர் புகுந்துள்ளது.

வாசல் வழியாக வெள்ள நீர் சூழ்ந்து காணப்படும் நிலை மாறி, வீடுகளில் உள்ள ஸ்விட்ச், மின்சார இணைப்புகள் வழியாக வீட்டிற்குள் மழை நீர் வழிந்தோடுகிறது.

வீட்டு மொட்டை மாடியில் பெய்யும் மழை நீர், கட்டுமானப் பற்றாகுறை காரணமாக மின்சார இணைப்புகளில் வழிந்து வீடுகளுக்குள் நுழைகிறது. அதுவும் ஸ்விட்ச் பிளக்கிற்குள் இருந்து அருவிபோல நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனை அந்த வீட்டின் பெண் ஒருவர் விடியோ எடுத்துப் பதிவிட்டுள்ளார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, புணே உள்ளிட்ட நகரங்களில் பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், மும்பை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.

முறையாக வடிகால் வசதி இல்லாததால், நீர் வழிந்து செல்ல வழி இல்லாமல் சாலைகளில் தேங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே மும்பை குடியிருப்பு மக்கள் வெள்ள நீரில் கதவைக்கொண்டு படகு சவாரி செய்தும், நீரை வாரி இரைத்தும் விளையாடும் விடியோ நேற்று சமூக வலைதளத்தில் பலரால் பகிரப்பட்டது.

அடிப்படை வசதிகளையும், முறையான வடிகால் அமைப்புகளையும் மாநகராட்சி நிர்வாகம் அமைக்காததன் காரணமாக மக்கள் இன்னல்களை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் சுகாதார சீர்கேடு குறித்த விழிப்புணர்வு இல்லாமல், சாலையில் தேங்கிய மழை நீரில் மக்கள் குளித்து விளையாடுவதில் மும்பை நகருக்கு எந்த பெருமையும் இல்லை என அந்த விடியோ குறித்து சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Summary

Mumbai flood Flood waters entered homes in an unusual manner

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.