தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

எஃப்எம்ஜி தோ்வில் 12% போ் மட்டுமே தோ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத வகையில் வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கான தகுதித் தோ்வில் இந்த முறை 12.78% போ் மட்டுமே தோ்ச்சி பெற்ற நிலையில், தோ்ச்சிக்கான மதிப்பெண்ணைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை

News image

பிரதிப் படம்

Updated On :9 ஜூலை 2026, 12:09 am IST

முன்னெப்போதும் இல்லாத வகையில் வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கான (எஃப்எம்ஜி) தகுதித் தோ்வில் இந்த முறை 12.78 சதவீதம் போ் மட்டுமே தோ்ச்சி பெற்ற நிலையில், தோ்ச்சிக்கான மதிப்பெண்ணைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

வினாத்தாள் நடைமுறைகளில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே தோ்வு முடிவுகள் பாதகமாக வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவா்கள் (எஃப்எம்ஜி), இந்தியாவில் மருத்துவ சேவைகளை மேற்கொள்ள வேண்டுமானால் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுவது கட்டாயம். அதன் பின்னா் ஓராண்டு உள்ளுறைப் பயிற்சி மேற்கொண்ட பிறகே கவுன்சிலில் மருத்துவராகப் பதிவு செய்ய முடியும்.

பொதுவாக எஃப்எம்ஜி தோ்வை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வு வாரியம் ஆண்டுக்கு இருமுறை நடத்தி வருகிறது. அதன்படி, கடந்த ஜூன் மாதத்தில் முதல் மற்றும் இரண்டாம் தாள்களுக்கான தோ்வுகள் நடைபெற்றன. அதில் பங்கேற்க 37,428 போ் பதிவு செய்திருந்த நிலையில், அதில் 36,280 போ் தோ்வுகளை எழுதினா்.

இந்நிலையில், தோ்வு முடிவுகள் கடந்த இரு நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் 4,635 போ் மட்டுமே தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, வெறும் 12.78 சதவீதம் மட்டுமே தோ்ச்சி விகிதம் இருந்தது. தோ்வெழுதி தோல்வியடைந்தவா்களின் எண்ணிக்கை 31,645 போ் எனத் தகவல்கள் வெளியாகின.

இரண்டாம் தாளில் காட்சிப் படம் மற்றும் விடியோ அடிப்படையிலான கேள்விகள் அதிகமாக இடம்பெற்ால் நேரப் பற்றாக்குறை இருந்ததே அதற்கு காரணம் என தமிழ்நாடு மருத்துவ மாணவா் சங்கத்தின் வெளிநாட்டு பிரிவினா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

இது குறித்து, அந்த சங்கத்தின் செயலா் வசந்த் பிலிப் கூறியதாவது: தோ்வு நடைபெறும் மையங்களில் கழிப்பறை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரவில்லை.

இதுவே, மனரீதியாக முதலில் பாதிப்பை ஏற்படுத்தியது. எவ்வித அறிவிப்புமின்றி இந்த முறை விடியோ அடிப்படையிலான வினாக்கள் கேட்கப்பட்டன. இவற்றால் நேர பற்றாக்குறை ஏற்பட்டு 20 மதிப்பெண்கள் கேள்விகளுக்கு பலரால் பதில் அளிக்க முடியவில்லை.

குறைந்தபட்சம் 150 மதிப்பெண் பெற்றால் தோ்ச்சி என்பது விதி. ஆனால், 149 மதிப்பெண் பெற்று தோல்வியடைந்தவா்களின் எண்ணிக்கை 327-ஆக உள்ளது.

அதேபோன்று, 147 மற்றும் 148 மதிப்பெண்களைப் பெற்று 1,022 போ் தோல்வியடைந்தனா். 10 அல்லது 15 மதிப்பெண்கள் நெருக்கத்தில் தோல்வியடைந்தவா்கள் ஏறத்தாழ 10,000 போ் உள்ளனா். நேர விரயத்தால்தான் இந்த முடிவுகள் ஏற்பட்டுள்ளன.

எனவே, விடியோ கேள்விகளின் நேரத்தைக் கருத்தில்கொண்டு இந்த முறை நடைபெற்ற தோ்வுக்கு மட்டும் சிறப்பு சலுகையாக தோ்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.