மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

கேரளத்தில் திடீரென இடிந்து விழுந்த 130 ஆண்டுகள் பழைமையான மணிக்கூண்டு!

கேரள ரயில் நிலையத்தில் இருந்த 130 ஆண்டுகள் பழைமையான மணிக்கூண்டு திடீரென இடிந்து விழுந்தது குறித்து...

kozhikode clock tower collapse

கேரள ரயில் நிலையத்தில் இருந்த 130 ஆண்டுகள் பழைமை மணிக்கூண்டு திடீரென இடிந்து விழுந்தது... - எக்ஸ்

Published On :

கேரளத்தின் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருந்த 130 ஆண்டுகள் பழைமையான மணிக்கூண்டு திடீரென இடிந்து விழுந்துள்ளது.

கோழிக்கோடு ரயில் நிலையத்தின் 2 ஆவது மற்றும் 3 ஆவது வழித்தடங்களுக்கு இடையே இருந்த பாரம்பரிய கட்டடமாக அறியப்பட்ட 130 ஆண்டுகள் பழைமையான மணிக்கூண்டு இன்று (ஜூலை 9) காலை 11 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.

இதனைத் தொடர்ந்து, கட்டட இடிபாடுகள் முழுவதும் 2 ஆவது வழித்தடம் மற்றும் அங்கு நின்றிருந்த ரயிலின் மீது விழுந்ததாகவும், மின்சாரக் கம்பிகள் சேதமானதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில், நல்வாய்ப்பாகப் பயணிகள் மற்றும் ரயில்வே பணியாளர்கள் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பழைமை வாய்ந்த மணிக்கூண்டின் கட்டடம் பலம் இழந்து இடிந்து விழுந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே, கட்டடம் பலம் இழந்திருந்ததால் அது இடிந்து விழக்கூடும் என்பது குறித்து தாங்கள் எச்சரிக்கைகளைப் பெற்றிருந்ததாகவும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ரயில் நிலையம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தால், நாட்டிலுள்ள ரயில் நிலையங்களில் உள்ள பழைமையான கட்டடங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளதாக, பயணிகள் மற்றும் ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Summary

A 130-year-old clock tower at the Kozhikode railway station in Kerala has suddenly collapsed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.