வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!இன்னும் ரூ.2000 நோட்டு வைத்திருக்கிறீர்களா? என்ன செய்ய வேண்டும்?வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!தவெகவும் திமுகவும் ஏன் ஒரே அணியில் வரக்கூடாது? திருமாவளவன்விரைவில் புதிய ஐஆர்சிடிசி இணையதளம்! நச்சென்று நான்கு மாற்றங்கள்!
/

கேரளத்தில் ரூ. 40 கோடி போதைப்பொருள்கள் பறிமுதல்! ரமேஷ் சென்னிதலா

கேரளத்தில் ரூ. 40 கோடி போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி...

News image

கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா - ENS

Updated On :11 ஜூலை 2026, 4:46 pm IST

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கேரளத்தில் ரூ. 40 கோடி போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் சென்னிதலா சனிக்கிழமை (ஜூலை 11) தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்க அம்மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா ‘ஆபரேஷன் தூஃபான்’ என்ற தீவிர போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை அறிவித்திருந்தார்.

இதுகுறித்து ரமேஷ் சென்னிதலா பேசியதாவது:

‘ஆபரேஷன் தூஃபான்’ நடைமுறைப் படுத்தப்பட்டு வெற்றிகரமாக ஒரு மாதம் கடந்துவிட்டது. இதுவரை போதைப்பொருள் தொடர்பான வழக்கில் 6,700- க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு 6,000 -க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் ரூ. 30 முதல் ரூ. 40 கோடி போதைப்பொருள்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆபரேஷன் தூஃபன் நடவடிக்கை வெற்றி அடைந்துள்ளது. இதனால் போதைப்பொருள் தொடர்பான பிற குற்றங்களும் தடுக்கப்பட்டுள்ளன.

ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் ஆதரவோடு போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கையில் கேரள காவல்துறை ஈடுபட்டு வருகிறது. மேலும், இந்த நடவடிக்கை தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்று ரமேஷ் சென்னிதலா தெரிவித்தார்.

Summary

Minister Ramesh Chennithala stated on Saturday (July 11) that narcotics worth Rs 40 crore have been seized in Kerala in the last month alone.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.