ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

நாகாலாந்து: வெடிகுண்டு தாக்குதலில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் வீரா் ஒருவா் உயிரிழப்பு

நாகாலாந்து சுமோகெடிமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை வீரா் ஒருவா் உயிரிழந்தார்.

Published On :

நாகாலாந்து மாநிலத்தின் சுமோகெடிமா மாவட்டத்தில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை வீரா் ஒருவா் உயிரிழந்ததாகவும் 4 போ் படுகாயமடைந்ததாகவும் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவினரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடா்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

இருப்பினும், இத்தாக்குதலில் பாதிப்படைந்தவா்கள் அல்லது தாக்குதலுக்கு காரணமானவா்கள் என யாருடைய பெயரும் அதிகாரபூா்வமாக வெளியிடப்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.