உலகின் 18% ஆண்ட்ராய்ட் கேம் பதிவிறக்கங்களை இந்தியா மேற்கொள்வதாக ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. இதன்மூலம், உலக மிகப்பெரிய மொபைல் கேம் சந்தைகளில் ஒன்றாக இந்தியா தனது இடத்தை வலுப்படுத்தியுள்ளது. ஆனால், அதன் வருவாய் ஈட்டும் முறை உலகின் போக்கிலிருந்து பெரிதும் மாறுபடுகின்றது.
மின்டெக்ரல் என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் வெளியிட்ட அறிக்கையில், உலகளவில் இந்தியா 17.8% ஆண்ட்ராய்ட் கேம் பதிவிறக்கங்களை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆப்பிள் போன்களில் 2.8% மட்டுமே மேற்கொள்ளப்படும் நிலையில், இந்தியாவில் கேம் விளையாடுவதற்கு பெரும்பாலும் ஆண்ட்ராய்ட் போன்களே விருப்பத்திற்குரியதாக உள்ளது.
இந்தியா முழுவதும் 97.5% மொபைல் கேம்கள் ஆண்ட்ராய்ட் போன்களில் விளையாடப்படும் நிலையில் உலகளவில் 85.6% ஆக இருக்கின்றது. இதன்மூலம், பயனர்களை ஈர்க்கவும், தயாரிப்புகளைச் சோதிக்கப்வும், பார்வையாளர்களை விரிவுபடுத்தவும் ஆண்ட்ராய்ட் இயங்குதளமே முதன்மையாக விளங்குகிறது என அறிக்கை குறிப்பிடுகின்றது.
மேலும், உலகின் செலவு குறைவான கேமிங் சந்தையாக இந்தியா திகழ்வதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளைவிட ஒரு கேம் பதிவிறக்கம் செய்வதன் மூலம் கிடைக்கும் சராசரி வருவாய் இந்தியாவில் குறைவாகவே உள்ளது.
அதேபோல, உலகளவில் ஆண்ட்ராய்டு போன்களில் வரும் 'ரிவார்டட் வீடியோ' விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் 22 மடங்கு குறைவாகவே உள்ளது.
இந்தியாவில் கேமிங் மூலம் கிடைக்கும் ஒட்டுமொத்த வருவாயில் 63% செயலிக்குள் வரும் விளம்பரங்கள் மூலம் மட்டுமே கிடைக்கின்றன.
ஆனாலும், ஆண்ட்ராய்ட் கேமிங் வருவாயில் சுமார் 70% செயலிக்குள் வாங்கப்படும் முறையின் மூலமே வருகிறது. இது, கேமிங் வழியே வருவாய் ஈட்டும் உத்தியைக் குறிக்கிறது.
இந்திய வெளியீட்டாளர்களை விட, பொதுவான பயனர்களை ஈர்ப்பதற்கு பலதரப்பட்ட வழிகளை கேமிங் நிறுவனங்கள் கையாளுகின்றன என அறிக்கை தெரிவித்துள்ளது.
முக்கியமாக, இந்தியாவில் கேமிங் செயலிகள் நிறுவப்படுவதற்கு கூகுள் நிறுவனமே முக்கியப் பங்கு வகிக்கிறது. கேமிங் நிறுவனங்கள், செயலி விநியோகத்திற்கான மற்ற வழிகள் அதில் நான்கில் ஒரு பங்கு பங்களிப்பையை வழங்குகின்றன.
Summary
A report states that India accounts for 18% of global Android game downloads.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹசீனா நிகழ்வில் கூறப்பட்ட கருத்துகளை இந்தியா ஆதரிக்கவில்லை: வெளியுறவு அமைச்சகம்

வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம்

தமிழக நிதிநிலை அறிக்கை: யெஸ் இந்தியா கேன் அமைப்பு வரவேற்பு

இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் ஜின்பிங் பங்கேற்பாரா? சீனா மழுப்பல்
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! தனித் தீர்மானம் நிறைவேற்றம்! | TN Assembly | TVK



