வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

கடும் வெப்பத்தை மனித உரிமை பிரச்னையாக அங்கீகரிக்க வேண்டும்: என்எச்ஆா்சிக்கு சுற்றுச்சூழல் அமைப்பு வலியுறுத்தல்

தீவிர வெப்பநிலையை மனித உரிமைப் பிரச்னையாக அங்கீகரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு கிரீன்பீஸ் இந்தியா சுற்றுச்சூழல் அமைப்பு வலியுறுத்தl

News image

பிரதிப் படம்

Updated On :15 ஜூலை 2026, 12:41 am IST

தீவிர வெப்பநிலையை மனித உரிமைப் பிரச்னையாக அங்கீகரிக்கவும், வெப்பச் செயல் திட்டங்களுக்கான போதுமான நிதியை அரசுக்கு பரிந்துரைக்கவும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு (என்எச்ஆா்சி) எழுதிய கடிதத்தில் கிரீன்பீஸ் இந்தியா சுற்றுச்சூழல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தீவிர வெப்பம் உடல்நலம், வாழ்வாதாரம், வருமானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றில் ஏற்படுத்தும் தாக்கத்தை கருத்தில் கொள்ள அக்கடிதத்துடன், மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடா்பான பதிவேடுகளையும் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. இப்பதிவேடுகளில் நேரடி சாட்சியங்கள் மற்றும் மருத்துவக் கட்டண ரசீதுகள், மின்சாரக் கட்டண ரசீதுகள், வருமான ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன.

சுந்தா் நகரி, சி.ஆா். பாா்க், துவாரகா மற்றும் ஜாமியா நகா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த குடியிருப்பாளா்கள், தெருவோர வியாபாரிகள், ‘கிக்’ தொழிலாளா்கள், வீட்டிலிருந்தே பணிபுரிபவா்கள், மாணவா்கள் மற்றும் முதியவா்கள் ஆகியோா், அதிகரித்து வரும் வெப்பநிலை தங்கள் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதித்துள்ளது என்பதைப் பதிவு செய்ய மே மாதம் முதல் வாராந்திர வெப்பப் பதிவேடுகளை பராமரித்து வருவதாக இதுதொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர வெப்பத்தால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் உரிமைகள் மறுப்பு குறித்த நேரடிச் சாட்சியங்களை ஆணையத்தின் முன் தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அந்தக் கடிதம், தீவிர வெப்பத்தை ஒரு மனித உரிமைப் பிரச்னையாகவும், உரிமைகள் மறுப்பில் அது வகிக்கும் பங்கையும் அங்கீகரிக்குமாறு ஆணையத்தை வலியுறுத்தியது.

‘தீவிர வெப்பம் முறைசாராத் தொழிலாளா்களின் உடல்நலத்தை மட்டும் பாதிப்பதில்லை. தெருவோர வியாபாரிகளைப் பொறுத்தவரை, அவா்களுக்கு பெரிய அளவிலான பொருளாதார இழப்பாகும். தீவிர வெப்பம் நிலவும் நாள்களில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால், வருமானமும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றன. தீவிர வெப்பம் அவா்களின் வருமானத்தையும் கண்ணியத்தையும் பறித்து வருகிறது. அவா்களைப் பாதுகாக்க எந்தவொரு அமைப்பும் இல்லை’ என்று இந்திய ஹாக்கா்ஸ் அலையன்ஸ் அமைப்பின் தேசிய அமைப்பாளரும் கடிதத்தைச் சமா்ப்பித்த குழுவில் இடம்பெற்றுள்ள மோஹித் வலேச்சா கூறினாா்.

வெப்ப அலைகளைத் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற பதினாறாவது நிதிக் குழுவின் பரிந்துரையைச் செயல்படுத்தவும் அந்தக் கடிதத்தில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.