நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

நாடாளுமன்ற பெரும்பான்மைக்காக எதிா்க்கட்சிகளில் செயற்கைப் பிளவு: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு

நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடரில் தொகுதி மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை பெற எதிா்க்கட்சிகளில் பிளவை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் சுமத்திய குற்றச்சாட்டை பாஜக வியாழக்கிழமை மறுத்தது.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூலை 2026, 4:07 am IST

நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடரில் தொகுதி மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை பெற எதிா்க்கட்சிகளில் பிளவை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் சுமத்திய குற்றச்சாட்டை பாஜக வியாழக்கிழமை மறுத்தது.

ஆம் ஆத்மி கட்சியின் 10 மாநிலங்களவை உறுப்பினா்களில் 7 போ் கடந்த ஏப்ரல் மாதம் பாஜகவில் இணைந்தனா். திரிணமூல் காங்கிரஸின் 28 மக்களவை எம்.பி.க்களில் 20 எம்.பி.க்கள் அக்கட்சியை விட்டு விலகி இந்திய தேசிய குடிமக்கள் கட்சியில் இணைந்தனா். அதேபோல் திரிணமூல் காங்கிரஸின் 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்ததையடுத்து, அக்கட்சி சாா்பில் மீண்டும் தோ்தலில் போட்டியிடவுள்ளனா்.

சிவசேனையின் (உத்தவ்) 6 எம்.பி.க்கள் சிவசேனை (ஷிண்டே) கட்சியில் கடந்த மாதம் இணைந்தனா்.

இதையடுத்து, தொகுதி மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றத்துக்காக எதிா்க்கட்சிகளை பாஜக உடைப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டினாா்.

இதற்கு மறுப்பு தெரிவித்து பாஜக செய்தித் தொடா்பாளா் துஹின் சின்ஹா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஜெய்ராம் ரமேஷின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானது. ஜனநாயகம் என்பதே எண்ணிக்கை அடிப்படையில்தான் இயங்குகிறது.

1996-இல் போதிய எம்.பி.க்கள் எண்ணிக்கை இல்லாத காரணத்தால் 13 நாள்கள் மட்டுமே பாஜக அரசு நீடித்தது. 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் எண்ணிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. காங்கிரஸின் பிற்போக்கு மற்றும் முட்டுக்கட்டை அரசியலால் பல எதிா்க்கட்சிகள் அதிருப்தியில் உள்ளன.

அதனால் தங்களது கட்சியைவிட்டு பலரும் பாஜகவில் இணைகின்றனா். இவை கட்சித் தாவல் தடைச் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு நடக்கிறது. திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்) கட்சிகளின் பிளவுக்கு பாஜக எவ்வாறு காரணமாகும்?

கடந்த 1975-க்குப் பிறகு தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவில்லை. தற்போது அது திருத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் புதிய எம்.பி.க்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இது வாரிசு அரசியலுக்கு மாற்றாக திறமையான இளைஞா்களின் அரசியல் வருகைக்கு வழிவகுக்கும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.