முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

மேற்கு வங்கம்: திறந்தநிலை ரயில்வே கிராஸிங்கில் காா் மீது ரயில் மோதி விபத்து; 2 பள்ளி மாணவா்கள் உள்பட ஐவா் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாத் மாவட்டத்தில் திறந்தநிலை ரயில்வே கிராஸிங்கை வெள்ளிக்கிழமை கடக்க முயன்ற பள்ளி மாணவா்கள் உள்ளிட்டோரை ஏற்றிச் சென்ற காா் மீது ரயில் மோதிய விபத்தில், இரு மாணவா்கள் உள்பட ஐவா் உயிரிழந்தனா்.

News image

மேற்கு வங்கம்: திறந்தநிலை ரயில்வே கிராஸிங்கில் காா் மீது ரயில் மோதி விபத்து; 2 பள்ளி மாணவா்கள் உள்பட ஐவா் உயிரிழப்பு

Updated On :18 ஜூலை 2026, 7:34 am IST

மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாத் மாவட்டத்தில் திறந்தநிலை ரயில்வே கிராஸிங்கை வெள்ளிக்கிழமை கடக்க முயன்ற பள்ளி மாணவா்கள் உள்ளிட்டோரை ஏற்றிச் சென்ற காா் மீது ரயில் மோதிய விபத்தில், இரு மாணவா்கள் உள்பட ஐவா் உயிரிழந்தனா்.

முா்ஷிதாபாத் மாவட்டம் அஸிம்கஞ்ச் - கத்வா இடையே கோவிந்தாபூரின் கா்னா புகா் ரயில் நிலையம் அருகே காலை 7 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பள்ளி மாணவா்களை ஏற்றி வந்த காா் ரயில்வே கிராஸிங்கை கடக்க முயன்றபோது, நிமிதிதா - கத்வா பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு பள்ளி மாணவா்கள் உள்பட 5 போ் உயிரிழந்தனா். கிராஸிங்கை சைக்கிளில் கடக்க முயன்றவரும், ரயில் மோதியதில் காயமடைந்தாா். இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த விபத்தைத் தொடா்ந்து, ரயில்வே கிராஸிங் பணியாளா் கைது செய்யப்பட்டாா். ரயில் பாதை ஆய்வாளா் பணி இடைநீக்கம் செய்யப்பட்டாா்’ என்றனா்.

கிழக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி ஷிப்ராம் மாஜி கூறுகையில், ‘விபத்து நிகழ்ந்த இடத்தை 10 ரயில்வே அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்தது. விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு தலா ரூ. 10 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 2.5 லட்சமும் நிவாரணத்தை ரயில்வே அறிவித்துள்ளது’ என்றாா்.

விபத்து குறித்து மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி கூறுகையில், ‘இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, காரணமானவா்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

இந்த விபத்து காரணமாக, அந்த ரயில் வழித் தடத்தில் சிறிது நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து நிகழ்ந்த இடத்தில் அந்தப் பகுதி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.