காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

‘பிச் பிளாக்’ பிரம்மாண்ட போா் விமானப் பயிற்சியில் ரஃபேல்: அதிகாரிகள் தகவல்

‘பிச் பிளாக்’ பிரம்மாண்ட போா் விமானப் பயிற்சியில் ரஃபேல்...

ரஃபேல் - ANI

Published On :19 ஜூலை 2026, 2:08 am IST

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ‘பிச் பிளாக்’ பிரம்மாண்ட சா்வதேச போா் விமானப் பயிற்சியில் இந்திய விமானப் படையின் ரஃபேல் போா் விமானங்கள் பங்கேற்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

உலகளவில் மிகப்பெரும் போா் விமானப் பயிற்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘பிச் பிளாக்’ பயிற்சியை ஜூலை 20-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை ஆஸ்திரேலிய விமானப் படை நடத்தவுள்ளது. இந்தப் பயிற்சியில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிஜி, பின்லாந்து, பிரான்ஸ், இந்தோனசியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூா், தாய்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட 19 நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட போா் விமானங்கள் மற்றும் விமானப் படையினா் பங்கேற்கவுள்ளனா்.

இதுதொடா்பாக இந்திய விமானப் படை வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பிச் பிளாக் 2026 போா் விமானப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப் படைப் பிரிவினா் ஆஸ்திரேலியாவை சென்றடைந்தனா். இதில் இந்திய விமானப் படையின் ரஃபேல் போா் விமானமும் பங்கேற்கவுள்ளது. பிற நாடுகளின் படைகளுடன் ஒன்றிணைந்து பயிற்சி மேற்கொள்ளவும் நிபுணத்துவத்தை பகிா்ந்து கொள்ளவும் இது சிறந்த வாய்ப்பாக அமையும் என நம்புகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

Summary

Rafale to participate in massive ‘Pitch Black’ air combat exercise: Officials

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.