நாடு முழுவதும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இதுவரை 7.5 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதில் கைதான ஒருவருக்குக் கூட மோடி அரசு தண்டனைப் பெற்றுத் தரவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது நூறு சதவீதம் நியாயமான கோரிக்கை என்றும் ராகுல் கூறியிருக்கிறார்.
புது தில்லியில் இன்று, வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பல்வேறு தரவுகளுடன் ராகுல் காந்தி விளக்கமளித்துப் பேசுகிறார்.
அப்போது அவர் கூறுகையில், நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராகவும், வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கையாக, தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், போராடும் மாணவர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாகவும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மிகப்பெரிய கும்பல், நாட்டின் எதிர்காலமாக இளைஞர்களின் வாழ்க்கையை நாசப்படுத்துகிறது. ஆனால், நாடு முழுவதும் தேர்வுக் குளறுபடிகளில் இதுவரை ஒருவருக்குக்கூட தண்டனை பெற்றுத் தரப்படவில்லை. குற்றம் செய்பவர்களை, யாரோ பாதுகாக்கிறார்கள் என்றும் ராகுல் காட்டமாகக் கூறியிருக்கிறார்.
மேலும், நாட்டின் பொது பட்ஜெட்டில் கல்விக்காக மத்திய அரசு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்குகின்றது. இதற்கு இணையாக, நீட் தேர்வுக்கு மட்டுமே ஆண்டுதோறும் ரூ.1.32 லட்சம் கோடியை பெற்றோர் செலவிடுவதாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார்.
நீட் தேர்வால் ஏராளமானோர் தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்திருக்கும் நிலையில், கையில் கறுப்புப் பட்டையுடன், நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ராகுல் பேசியிருக்கிறார்.
Summary
7.5 crore people affected qus paper leak; not a single person punished Rahul
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இதுவரை 152 தோ்வுத் தாள் கசிவு: ப. மாணிக்கம் தாகூா் குற்றச்சாட்டு

வினாத்தாள் கசிவுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம்: மாணவர்களை அழைக்கும் ராகுல்!







