ஒரு நிதியாண்டில் மத்திய பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்குவதற்கு நிகராக பெற்றோர்கள் நீட் தேர்வு பயிற்சிக்கு செலவிடும் தொகை இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்றிருக்கும் நிலையில், பல்வேறு தரவுகளுடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட்டில் கல்விக்கு மத்திய அரசு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்குகிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும், ஒரே ஒரு தேர்வுக்காக, நாட்டில் ஒட்டுமொத்த மக்கள் நீட் தேர்வு பயிற்சிக்காக ரூ.1.32 லட்சம் கோடி செலவிடுகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை ராகுல் வெளியிட்டார்.
அதாவது, ஒவ்வொரு ஆண்டும் 22 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகிறார்கள். ஒட்டுமொத்தமாக மாணவர்கள் நீட் பயிற்சிக்கு செலவிடும் தொகையில் சராசரி எடுத்தால், ஒரு மாணவர் செலவிடும் தொகை ரூ.6 லட்சமாக உள்ளது. மக்களிடமிருந்து வரி வசூலித்து, மத்திய அரசு கல்விக்காக செலவிடுவதற்கு நிகராக, ஒரே ஒரு தேர்வுக்காக, தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர் செலவிடும் தொகை இருக்கிறது நம் நாட்டில். இது முழுக்க முழுக்க திருட்டு. வேறு எதுவும் இல்லை. இதையெல்லாம் செய்துவிட்டு, கடைசியாக, வினாத்தாள் கசிந்துவிட்டது, தேர்வு ரத்து என்று சொல்கிறீர்கள்.
இதனால்தான், வெளியே இளைஞர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய இளைஞர்களின் எதிர்காலம் மோசமாக உள்ளது, படித்து முடித்த பிறகும், வேலை வாய்ப்புக்கான கதவுகள் மூடப்படுகின்றன. உற்பத்தி நிறுவனங்கள் மூடப்படுகின்றன. புத்தாக்க தொழில் நிறுவனங்கள் மூடப்படுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. பொதுத் துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகின்றன. எனவே, இளைஞர்களுக்கு வேலை இல்லை. அதனால்தான் அவர்கள் போராடுகிறார்கள் என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Rs 1.4 lakh crore for education in the budget; people spend Rs 1.32 lakh crore on NEET coaching: Rahul
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவர்களை நீங்கள் மன்னிக்கத் தேவையில்லை; நீங்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல்

தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை நியாயமானது! - ராகுல் காந்தி

ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!

அபுதாபியில் நீட் மறுதேர்வா? குழந்தைகளின் எதிர்காலத்தில் விளையாட வேண்டாம்: ராகுல்
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp




