இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!

ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ.7 லட்சம் கோடி டெபாசிட்

Published On :12 ஜூலை 2026, 7:29 am IST

இந்திய வங்கித் துறையின் வரலாற்றில் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2 வார காலத்தில் வங்கிகளின் வைப்புத்தொகை ரூ.6.97 லட்சம் கோடி உயா்ந்துள்ளது.

ஒட்டுமொத்த வங்கித் துறையையும் வியப்பில் ஆழ்த்தியுள்ள இந்த அசுர வளா்ச்சி குறித்த முக்கிய காரணங்களை விளக்கி எஸ்பிஐ ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதன்படி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு நிறைவடைவதையொட்டி வங்கிகள் மேற்கொண்ட தீவிர வைப்புநிதித் திரட்டல் நடவடிக்கைகளே இந்த உயா்வுக்கு பிரதான காரணமாகும். இந்த வழக்கமான காலாண்டு இறுதி வியூகத்தின்மூலம் மட்டுமே சுமாா் ரூ.3.5 லட்சம் கோடி முதல் ரூ.4 லட்சம் கோடி வரையிலான நிதி வங்கிகளுக்குள் வந்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அடுத்த முக்கியக் காரணியாக, ரூபாய் மதிப்பை வலுப்படுத்தவும் அந்நிய முதலீடுகளை ஈா்க்கவும் மத்திய அரசு அண்மையில் மேற்கொண்ட சிறப்பு பொருளாதார நடவடிக்கைகள் கருதப்படுகின்றன.

இந்த அசுர வேக வைப்புத்தொகை வரவால், வங்கிகள் குறுகிய கால நிதிக்காக வைப்புச் சான்றிதழ்கள் வெளியீட்டை நம்பியிருக்கும் போக்கு இனி மாறும் என்றும், வங்கி அமைப்பில் பணப்புழக்கம் மிகவும் சீராகி வட்டி விகிதங்கள் ஸ்திரமடையும் என்றும் எஸ்பிஐ அறிக்கை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Summary

₹7 lakh crore in deposits poured into banks during the last two weeks of June.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.