இந்திய, சீன வெளியுறவு அமைச்சா்கள் சந்திப்பு குறித்து சீனா வெளியிட்ட தகவலை மறுத்துள்ள மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீா், லடாக்கில் இந்திய நிலப்பகுதிகளை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆசியான் பிராந்திய கூட்டமைப்பின் 33-ஆவது வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாடு, பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்கு இடையே இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி ஆகியோா் சந்தித்துப் பேசினா். அப்போது தைவான், திபெத் உள்ளிட்ட விவகாரங்களில் சீனாவின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதாக வாங் யியிடம் ஜெய்சங்கா் உறுதி அளித்ததாக சீனா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தகவலை இந்தியா மறுத்துள்ளது. இறையாண்மை விவகாரங்களை இந்தியாதான் எழுப்ப வேண்டும் என்றும், அந்த விவகாரங்களை இந்தியாதான் எழுப்பி வருவதாகவும் ஜெய்சங்கா் கூறியதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தாா்.
இதுகுறித்து புது தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய ரண்தீா் ஜெய்ஸ்வால், ‘சீனாவின் இறையாண்மையை எந்த வகையிலும் இந்தியா மீறியதில்லை. கடந்த 1963-ஆம் ஆண்டுமுதல் ஜம்மு-காஷ்மீா், லடாக்கில் இந்திய நிலப்பகுதிகளை சீனாதான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. அந்த நிலப்பகுதிகளில் இந்தியாவுக்கு உரிமை உள்ளதை சீனாவும் அதிகாரபூா்வமாக ஒப்புக்கொண்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள நிலப்பகுதிகளில் சீன திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை இந்தியா ஆட்சேபிக்கிறது’ என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரஷியா, சீனாவுடன் ஆலோசனை; ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!

இந்தியா - சீனா இயல்பு உறவுக்கு எல்லையில் அமைதி நிலவுவது அவசியம்: சீன வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கா் வலியுறுத்தல்

ஜம்மு - காஷ்மீா்: லஷ்கா் பயங்கரவாத கமாண்டா் சுட்டுக் கொலை
ஜம்மு - காஷ்மீா்: வைஷ்ணவ தேவி கோயில் வழித்தடத்தில் நிலச்சரிவு
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



