/

தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! ஜனநாயகத்தில் அஞ்சாதீர்கள்: அபிஜீத் தீப்கே

தர்மேந்திர பிரதான் ராஜிநாமா குறித்து அபிஜீத் தீப்கே பேசியுள்ளது பற்றி...

News image

அபிஜீத் தீப்கேவுடன் சிஜேபி ஆதரவாளர்கள். - படம் - பிடிஐ

Updated On :25 ஜூலை 2026, 2:59 pm IST

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ததையடுத்து, ஜந்தர் மந்தரில் உள்ள சிஜேபியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராடி வருகின்றனர்.

ஜந்தர் மந்தரிலிருந்து கடந்த ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற சிஜேபி ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதில் இரு தரப்பினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, காவல்துறையின் செயலைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

இந்தப் போராட்டத்தில் கடந்த ஜூன் 28 முதல் உண்ணாவிரதம் இருந்து வந்த லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் அதனை வாபஸ் பெற்றுள்ளார்.

மேலும், மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தர்மேந்திர பிரதான் தனது பதவியை இன்று ராஜிநாமா செய்துள்ளார்.

இந்தச் செய்தியை ஜந்தர் மந்தரில் அறிவித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே, “தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்துள்ளார். நீங்கள் பயப்படாமலும் இந்த அரசாங்கதுக்கு தலைவணங்காமலும் இருந்தால், யாருடைய ராஜிநாமாவை வேண்டுமானாலும் பெறலாம். ஜனநாயகத்தில் அஞ்சாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Summary

BJP members in Mandar are rejoicing following the resignation of Union Education Minister Dharmendra Pradhan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.