தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராஞ்சியில் இருந்து புவனேஸ்வர் செல்ல வேண்டிய தனியார் விமானம் புறப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிர்சா முண்டா விமான நிலைய இயக்குனர் வினோத் குமார் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது, 58 பயணிகளுடன் தனியார் நிறுவன விமானம் சனிக்கிழமை மாலை சுமார் 6.20 மணியளவில் இங்கு வந்து சேர்ந்தது.
தரையிறங்கிய பின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் விமானம் ஒடிசா தலைநகருக்குத் திரும்ப முடியவில்லை.
அதேவேளையில் ராஞ்சியைச் சேர்ந்த பயணிகள் அனைவரும் கொல்கத்தாவில் இருந்து வந்த மற்றொரு விமானம் மூலம் புவனேஸ்வர்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், அது கொல்கத்தாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் பெரிய அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
Summary
A Bhubaneswar-bound flight could not take off from here after a technical glitch was detected in the aircraft during a check, Birsa Munda Airport Director Vinod Kumar said on Sunday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போா் எதிரொலி: சென்னையில் 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு

பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?

விமானம் ஓட்டும் அனுபவம்! கூகுள் குரோமில் பெறுவது எப்படி?

சிங்கப்பூா் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மீண்டும் தரையிறக்கம்
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



