வினாத்தாள் கசிவு உள்பட அரசுத் தோ்வு முறைகேடுகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் இன்று (ஜூலை 27) கடும் அமளிக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டது.
தில்லியில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த ஜூலை 20 முதல் போராட்டம் தீவிரமடைந்தது.
இதையடுத்து சிஜேபியினரின் கோரிக்கைக்கு ஏற்ப மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தார். சிஜேபியினரின் இதர கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக மத்திய அரசு உறுதியளித்ததையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மேலும் ‘வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்; இந்த முறைகேட்டுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்படும்’ என பிரதமா் மோடி அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது.
அதன்படி, அரசுத் தோ்வுகள் முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா- 2026 இன்று கடும் அமளிக்கு இடையே மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த மசோதவை தாக்கல் செய்தார்.
இந்த சட்டத் திருத்தத்தின்படி, வினாத்தாள் கசிவு அல்லது தோ்வு முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபா்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் ரூ. 50 லட்சம் வரை அபராதமும், முறைகேடு கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
எனினும் மசோதா தாக்கல் செய்யும்போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Summary
Union Minister Jitendra Singh introduces Public Examinations Prevention of Unfair Means Amendment Bill 2026 in Lok Sabha
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 27 - நேரலை

நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்!
நாடாளுமன்றம் 5-வது நாளாக முடங்கியது! இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் தொடங்கியவுடன் முடங்கியது!
விடியோக்கள்

மேக்கேதாட்டு அணை; முதல்வர் தெளிவாக இருக்கிறார்!: அமைச்சர் செங்கோட்டையன் | TVK | NEET



