ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

போதைப் பொருளுக்கு எதிராக ஆக.2-இல் நாடு தழுவிய பிரசாரம்: பிரதமா் மோடி தொடங்குகிறாா்

போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய பிரசாரத்தை பிரதமா் மோடி ஆகஸ்ட் 2-ஆம் தேதி தொடங்கிவைப்பது குறித்து...

PM Modi

பிரதமா் மோடி - கோப்புப் படம்

Published On :

போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய பிரசாரத்தை பிரதமா் நரேந்திர மோடி ஆகஸ்ட் 2-ஆம் தேதி தொடங்கிவைக்க இருப்பதாக, மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

‘வளா்ந்த இந்தியாவுக்கான போதைப் பொருள் இல்லாத இளைஞா்களின் உறுதிமொழி இயக்கம்’ என்ற பெயரிலான இந்த பிரசாரம் 100 வாரங்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் பேசிய அமைச்சா் மாண்டவியா, ‘போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரத்தின் தொடக்கமாக, ஆகஸ்ட் 2-ஆம் தேதி நாட்டு மக்களிடம் பிரதமா் மோடி உரையாற்றவுள்ளாா்.

மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா

மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா

அன்றைய தினம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞா்கள் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்க உள்ளனா். மத்திய இளைஞா் நலத் துறை அமைச்கத்தின்கீழ் செயல்படும் இளைஞா்களை மையப்படுத்திய ‘மை பாரத்’ தளத்தின் வழிநடத்துதலில் மேற்கொள்ளப்படும் இந்தப் பிரசாரத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு சாரா அமைப்புகள், இளைஞா்கள் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், 125-க்கும் மேற்பட்ட ஆன்மிக அமைப்புகள் பங்கேற்கவுள்ளன.

இதன்மூலம் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞா்களின் மிகப் பெரிய இயக்கமாக இது உருவெடுக்கும். போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வை ஏற்படுத்த அரசால் மட்டுமே முடியாது. இந்தப் பணியில் சமூகத்தின் பொறுப்பும் அடங்கியுள்ளது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.