பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

முந்தைய அரசு ஏற்றுக் கொண்டதால் பிஎம்ஸ்ரீ பள்ளி கட்டாயமாகிறது: கேரள காங்கிரஸ் கூட்டணி அரசு

கேரளத்தில் முன்பு ஆட்சியில் இருந்து முந்தைய இடதுசாரிக் கூட்டணி பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொண்டதால் அதனை அமல்படுத்த வேண்டியுள்ளது என்று காங்கிரஸ் கூட்டணி அரசு அறிவித்துள்ளது.

News image

கேரள முதல்வர் வி.டி. சதீசன் - கோப்புப் படம்

Updated On :31 ஜூலை 2026, 2:08 am IST

கேரளத்தில் முன்பு ஆட்சியில் இருந்து முந்தைய இடதுசாரிக் கூட்டணி பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொண்டதால் அதனை அமல்படுத்த வேண்டியுள்ளது என்று காங்கிரஸ் கூட்டணி அரசு அறிவித்துள்ளது.

கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான முந்தைய இடதுசாரி கூட்டணி ஆட்சியில் மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ (வளரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) திட்டத்தில் இணைய புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. ஆனால், இடதுசாரி கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்பு தெரிவித்ததால், அந்தத் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.

அண்மையில் நடைபெற்ற கேரள பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முன்பு எதிா்க்கட்சியாக இருந்தபோது பிஎம்ஸ்ரீ திட்ட அமலாக்கத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸ் இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இருந்து வெளியேறினால் கேரள அரசுக்கு மொத்தமாக ரூ.2,000 கோடிக்கு மேல் கல்வி நிதி இழப்பு ஏற்படும் என்று காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த மாதம் கூறியது.

இந்நிலையில், காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் கூட்டம் திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை முதல்வா் வி.டி. சதீசன் தலைமையில் நடைபெற்றது. இதன் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய கூட்டணியின் ஒருங்கிணைப்பாளா் அடூா் பிரகாஷ்,‘கேரளத்தில் முன்பு ஆட்சியில் இருந்த இடதுசாரிக் கூட்டணி, பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொண்டதால் அதனை அமல்படுத்த வேண்டிய நிலையில் தற்போதைய அரசு உள்ளது. இதன் மூலம் இத்திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள கல்வி நிதியும் மாநிலத்துக்கு கிடைக்கும். எந்தெந்த பள்ளிகளில் திட்டத்தை அமல்படுத்துவது என்பதை நாம் முடிவு செய்து கொள்ளலாம். அதேபோல கிடைக்கும் நிதியையும் எந்த கல்வித் திட்டத்தில் எப்படி செலவிடுவது என்பதையும் மாநில அரசு முடிவு செய்யலாம்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.